திருப்பத்தூர், செப். 23 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும் வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, வனத்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டாமாறுதல், இலவசவீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி மின்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் 6750 மொத்தம் 367 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆம்பூர் வட்டத்திற்குட்பட்ட சின்னப்பள்ளிகுப்பம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் இராஜேஸ்வசக்திவேல் என்ற இலங்கை தமிழருக்கு இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஊறுகாய் மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல் குறித்து 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு சிறு முதலீட்டில் தொழில் செய்து வருகிறார். அவருடைய தொழிலை விரிவு படுத்துவதற்காக இந்தியன் வங்கி வாணியம்பாடி கிளையின் மூலம் ரூ.3 இலட்சம் வங்கிக் கடனுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்திரவல்லி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷண குமார், உதவி இயககுநர் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மிரியாம் ரெஜினா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இராஜன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்



