திருப்பரங்குன்றம், செப். 20 –
மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மறைந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் 98 வது நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ மதங்களில் இருந்து இந்து மதத்தில் மீண்டும் இணைந்தவர்களுக்கு இணைப்பு விழா நடைபெற்றது.
கிறிஸ்தவ மதங்களில் இருந்து மதம் மாறிய இந்துக்களுக்கு மீண்டும் இந்து மதத்தில் இணையும் “தாய் மதம் தழுவும் விழா” இணைப்பு விழா இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி மாவட்ட பொறுப்பாளர் அரசு பண்டி மற்றும் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் நடைபெற்றது.
அந்த வகையில் அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் சுமார் 21 குடும்பங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்தில் இணையும் தாய் மதம் தழுவும் விழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முன்னதாக சரவண பொய்கையில் நீராடி பின்னர் ஆறுமுக கந்தசஷ்டி கவசம் படித்து வெற்றிவேல் வீரவேல் என முழங்கி தாய் மதத்தில் இணைந்து கொண்டனர்.
குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப தூண், சிக் கந்தர் பாதுஷா தர்கா உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து முன்னணி சார்பில் தாய் மதம் தழுவு விழா நிகழ்ச்சி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



