கிருஷ்ணகிரி, செப். – 17 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் தட்றஹள்ளி நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், நகரச் செயலாளர்களான அஸ்லாம் ரஹ்மான் ஷெரீப், வேலுமணி, காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் கிருபாகரன், ஏ.சி. நாகராஜ், டிசிஆர் தினேஷ், கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



