கோவை, செப்டம்பர் 06 –
கோவை மாவட்டம் ஆலாந்துறை கிளிய கவுண்டன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மங்கல இசையுடன் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம்,குபேர பூஜை,ஸ்ரீ மகா கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம், நவகிரக ஹோமம்,கோ பூஜை,தீர்க்குடம் முளைப்பாலிகை,தெரு வீதி உலா வருதல், முதல் தேவிக்கு முதலாம் கால யாகம் 108 மூலிகையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆவணி 18ஆம் நாள் அன்று மங்கல இசையுடன் திருமுறை பாராயணம், இரண்டாம் காலயாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், முப்பெரும் சக்தி யானவளுக்கு மூன்றாம் கால யாகம் தொடர்ந்து மூலவர் பிரதிஷ்டை செய்தல் நிகழ்வு நடைபெற்றது. நான்காம் கால யாகம் தொடர்ந்து ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு கோவை ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயம் சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அடிகளார் முன்னிலையில் பிரதிஷ்ட ரத்தினம் சிவஸ்ரீ எஸ்.பி சிவமணிகண்ட சாஸ்திரிகள் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.
இதனை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அறக்கட்டளை செட்டுமை ஆர். தேவராஜ், எஜமானர் ஏ. சின்ன அய்யாசாமி, சேஷராஜ் வி. பழனிச்சாமி, விழா குழு தலைவர்கள் சுப்பிரமணியம் செல்வராஜ், செயலாளர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தீனதயாளன், அறக்கட்டளை தலைவர் பிரேம் சந்திரகுமார், உப தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் விழா கமிட்டியினர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக,அதிமுக முன்னாள் அமைச்சர் தொண்டமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. வேலுமணி, திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஆலாந்துறை பேரூர் கழக பொறுப்பாளர் ராமமூர்த்தி, நல்லறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஓகே ஸ்வீட்ஸ் நிறுவனர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா அன்னதானம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தேவாங்க செட்டியார் சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



