வேலூர்=14
காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் 9ஆம் ஆண்டு ஆயுதபூஜை விழா & ஆண்டு விழாவை முன்னிட்டு சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ், தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஏ.நாகமுத்துபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிக்கவும், தோல்வி அடைந்தால் மனம் தளராமல் முயற்சி செய்து வெற்றி பெறவும் அறிவுரைகள் வழங்கினர். இதையடுத்து தொடர்ந்து சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் & நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகள்
நிறுவனர் & தலைமை பயிற்சியாளர், டி.அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி நாட்டாண்மை வி.பெருமாள், தர்மகர்த்தா & கவுன்சிலர் கேஜி.சீனிவாசன், பயிற்சியாளர்கள் கே.திவாகர், ஜி. புவனேஷ், டி.விக்னேஷ்வரன், ஆர். லோகநாதன், எஸ்.சஞ்சய் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் 400 க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.