விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 99 ஆவது நினைவு நாளை ஒட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் அன்னாரது நினைவிடத்தில் மலர் மாலை வைத்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பே. சுப்பிரமணி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு மோகன் வட்டாட்சியர் இலட்சுமி துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் பெண்ணாகரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி மாதேஷ் ஓன்னப்பக்கவுண்டன அல்லி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி முருகன் பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் கோமதி வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் வருவாய் ஆய்வாளர் சுஜாதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்



