வேலூர், ஜூலை 22 –
வேலூர் மாவட்டம், ஸ்வாதி ஈவன்ட்ஸ் வேலூர் மெகா பேஷன் அண்ட் லைப் ஸ்டைல் கண்காட்சி வேலூர் காந்திநகர் பார்ச்சூன் பார்க்கிள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கிங்ஸ்டன் குழுமத்தின் தலைவர் சங்கீதா கதிர்ஆனந்த், நலம் மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். நர்மதா அசோக், பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் கௌரி பாலாஜி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். உடன் பிஎன்ஐ எக்ஸிக்யூடிவ் டைரக்டர் சுனிதா தீபக், ரெட்டி பில்டர்ஸ் ஜெகதீஸ்வரி, எண்ணம் சில்க்ஸ் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் சிவகாமி, ஸ்வாதி ஈவன்ட்ஸ் ஷனா, சங்கீதா மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



