வேலூர்=18
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி, 9 வார்டு, நியாமத் வீதியில் 15ம் மத்திய நிதிக்குழு மான்ய திட்டத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா, துணைத் தலைவர் அலியார் ஜுபேர் அகமது, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.