திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள திரு. நம் பெருமாள் நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வி முகமை தி.நம்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி குழு தலைவர் ஆர். கௌசல்யா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் ஆசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் டாக்டர் எஸ். சகாய செல்வராஜ், திண்டுக்கல் கல்வியாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஐ. லாசர் வேளாங்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பள்ளியில் நடைபெற்ற 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், ஷிப்பிங், உருளைக்கிழங்கு சேகரிக்கும் போட்டி, லெமன் கப் போட்டி, கபடி போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். மேலும் பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை எடுக்காமல் வந்த ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் தலைமை ஆசிரியர் ந.சேஷ திருவேங்கடம் நன்றி கூறினார்.



