அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ அவர்கள் தலைமையில் பேரூராட்சி துணை தலைவரும் சமூக சேவகருமான காந்திராஜ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . வார்டு கவுன்சிலர்கள் அய்யா சிவக்குமார்,தனம் செல்வக்குமார்,இராஜேஷ்வரி தங்கராஜா,நீலகண்ணன்,ஜெயந்தி நாராயணன், ஜோஸ்திவாகர் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பேரூராட்சி தூய்மை பணியாளர் அனைவருக்கும் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் தனது சொந்த பணத்தில் நிதி உதவி வழங்கினார்.



