திருப்பத்தூர்:மார்ச்:8, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவரும் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டமானது குனிச்சி பகுதியில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டமானது கந்திலி மத்திய ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் , மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் K.A.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய துணை செயலாளர்கள் சண்முகம், வழக்கறிஞர் மாது, தீபா, ஒன்றிய பொருளாளர் சக்கரை, மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, சசிகுமார், ஆர்வில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர் தேவராஜி, திருப்பத்தூர் ஒன்றிய கழக செயலாளர் (மேற்கு) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, திருப்பத்தூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் சு.ராசேந்திரன், மாவட்ட துணை செயலாளர் T.K.மோகன், மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் திருப்பூர் மனோகர் பாபு பேசுகையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தந்த துறை இலாகா அமைச்சர்களுக்கு சிறப்பாக ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு உண்டான நிதியினை உடனுக்குடன் வழங்கி வருகிறார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்து விடுவோம் என்று அறைகூவல் விடுக்கும் ஒன்றிய பாஜக அரசை அடியோடு விரட்ட வேண்டும். தமிழகத்தில் எப்போதும் இந்தி திணிப்பதற்கான இடத்தை வழங்கக் கூடாது. பேரறிஞர் அண்ணா கண்ட இரு மொழிக் கொள்கை மட்டுமே நிலைக்கும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக எதிர்ப்போம். தமிழரின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக தொல்லியல் ஆய்வினை செய்து 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வாழ்ந்ததற்கான சான்றுகள் இன்றும் கீழடி ஆய்வின் மூலமும், ஆதிச்சநல்லூர் ஆய்வின் மூலமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆதலால் தமிழ் மொழி என்றும் வளரும் என்றும், தமிழ்நாடு அரசின் இலவச பேருந்து பயணம், மருந்தகம், மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதியத் தொகை, நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டு பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் நித்தியானந்தம், மேனகா விவேகானந்தன், குமார், லட்சுமி கார்த்திகேயன், கந்திலி மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், யுவராஜ், பிரபாகரன், மாதேஷ், சிவசங்கர், ஐயப்பன், கோபிநாத், தகவல் தொழில் நுட்ப அணி சக்திவேல், தமிழ் குடிமகன், சோனியா சக்திவேல், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், ஆதிதிராவிடர் நலக்குழு பாலு, ஆதி ஒரு செந்தில், கந்திலி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் குனிச்சி கிளை கழக முன்னோடிகள், கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கந்திலி மதியம் ஒன்றிய பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட பிரதிநிதி ஆசிரியர் ஆர்வில் நன்றியுரை வழங்கினார்.