சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் திமுக இளைஞரணி சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பூவந்தி – சிவகங்கை சாலையில் நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 17 ஜோடிகளும், இரு பிரிவுகளா நடைபெற்ற சிறிய மாட்டு பிரிவில் தலா 17 ஜோடிகளும், கலந்து கொண்டன. பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும், பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டினை பூவந்தி, திருமாஞ்சோலை, சுண்ணம்பூர், பூஞ்சுத்தி சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் இருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.
போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics