திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கணமழையால் ஏறி குலம் மற்றும் கண்மாய்கள் நிரம்பியது இந்த நிலையில் கண்மாயின் கழுங்கு வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது, கழுங்கு கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தினால் கால்வாய் ஓரமாக உள்ள நைனார்பேட்டை கிராமத்தில் பயிரிடப்பட்ட சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் வாலை வெற்றிலை கொடிக்கால் வெண்டிச் செடிகள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இது குறித்து
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தோம் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இனிவரும் காலங்களிலாவது இந்த கால்வாயினை முறையாக தூர்வார வேண்டும் அதேபோல் 50 ஆண்டுகளுக்கு முன்னாடி கட்டப்பட்ட தூம்பு கால்வாய்களை மாற்றி பெரிய பாலமாக மாற்றுத்தருமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.