திருப்பூர், ஜூலை 09 –
மாவட்டத்தில் புதிய கட்டுமான பணிகள் ஏராளமாக நடைபெற்று வரும் நிலையில் அவற்றிற்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் பிற மாநிலங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள டைல்ஸ் மற்றும் சானிட்டரி வேர் உள்ளிட்ட பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக திருப்பூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருப்பூர் காங்கேயம் சாலை காயத்ரி மஹாலில் 11-ம் தேதி கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கான ஏற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது.
அப்போது கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் மோகன்ராஜ் பேசுகையில்: கண்காட்சியில் 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதில் கட்டிடங்களுக்கு தேவையான உட்புறம் மற்றும் வெளிப்புறங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் டைல்ஸ், சானிட்டரி வேர்ஸ் உள்ளிட்ட புதிய ரகங்கள் காட்சிப்படுத்தப்படும் எனவும் சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கட்டுமான துறை மருத்துவர்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளதால் பொதுமக்கள் தரமான பொருட்களை நேரடியாக கண்டு புதிய கட்டுமான தொழில் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.