ஊத்தங்கரை மே 14
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல் அருகே நல்லவன்பட்டி கிராமத்தில் விவசாயி ரகுபதி நிலத்தில் ஆட்டு கொட்டகையில் மர்ம விலங்கு கடித்து ஐந்து ஆடுகள் உயிர் இழந்துள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் இதே கொட்டையில் 17 ஆடுகள் மர்ப விலங்குகள் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது. வனப்பகுதி யொட்டி உள்ள நிலத்தில் மர்ம விலங்கு இரவில் கால்நடைகளை கடித்து கொன்று குவிப்பது வாடிக்கையாக உள்ளது .
இதே பகுதியில் உள்ள மணிவண்ணன், பழனி, கோபால், சென்னப்பன், சகுந்தலா, சென்னகிருஷ்ணன் உள்பட10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கால்நடைகளை மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளது. இதை வனதுரையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், உடனடியாக மாவட்ட நிர்வாகம் முன்வந்து தனி கவணம் செலுத்தி பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே விவசாயி ரகுபதியின் 17 ஆண்டுகள் மர்ம விலங்குகளால் கடித்து உயிர் இழப்பு ஏற்பட்டது அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருந்தால் 10 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 40 க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிர் இழந்திருக்காது.
இதனால் கால்நடைகளை மட்டும் ஆதாயமாக வைத்து பிழைத்து வரும் ஏழை
விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் அங்குள்ள கிராம மக்களை மர்ம விலங்கு தாக்குமுன் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.