நாகர்கோவில் , ஜூலை – 02
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு குளச்சல் அருகே 275 ஆண்டுகளாக நடத்தி வரும் புதூர் புனித லூசியா தேவாலயம் திருத்தலமாக அங்கீகாரம் பெற்று உள்ளது – தமிழகம் கேரளா வில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்லும் கடலோரம் அமைந்த முக்கிய தேவாலாயம் ..
இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார் நேரிடையாக வந்து தேவாலயம் கட்டி வழிபாடுகள் நடத்திய இடம் தான் கன்னியாகுமரி மாவட்டம். தேவாலயங்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற தேவாலயங்களும் உண்டு. அந்த வகையில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டை காடு புதூரில் உள்ள புனித லூசியா ஆலையம் பாரம்பரிய மிக்க வரலாற்றை கொண்டது . சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு கரை கொண்டு வந்து சேர்த்து அன்றே தேவாலயமாக கட்டி பிரார்த்தனைகள் வழிபாடுகள் நடத்தி வந்தனர். இந்த தேவாலயத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர் . அத்தகைய பிரசித்து பெற்ற இந்த தேவாலயம் கோட்டாறு மறைமாவட்ட நிர்வாகத்தால் திருத்தலமாக வரும் 12.07. 2024 அன்று மாலை 5:30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் மேதகு. நசரேன் சூசை அவர்கள் கோட்டாறு மறை மாவட்டத்தின் 4-வது திருத்தலமாக அறிவிக்கிறார்கள்.இம்மாபெரும் வரலாற்று சிறப்புமிகு நிகழ்வில் மறைமாவட்ட நிர்வாகம், அனைத்து வட்டார முதன்மை பணியாளர்கள், அருட்பணியாளர்கள் , அருட் சகோதரிகள், பக்தர்கள், மற்றும் பங்கு மக்கள் அனைவரும் திரளாய் பங்கேற்கிறார்கள். எமது புதூர் புனித லூசியா ஆலயமானது கோட்டாறு மறை மாவட்டத்தில் 4-வது திருத்தலமாக அறிவிக்கப்படும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணி வ. அமல்ராஜ் பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் கிங்ஸ்லி, செயலர் மெல்கின் பாபு , துணைச் செயலர் கரோலின் புனிதா, பொருளாளர் இயேசு ராஜா பேரவை உறுப்பினர்கள் புனித அன்னாள் பிறரன்பு, சபை அருட் சகோதரிகள் பங்கு மக்கள் யாவரும் செய்து வருகிறார்கள் .கடலில் மிதந்து வந்து புனித லூசியா அன்னயை தரிசிக்க கேரளாவில் இருந்து தினசரி மக்கள் வந்து செல்கின்றனர் நினைத்து வந்த தேவைகள் நிறைவேறும் இடமாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருவதாக இந்த தேவாலயத்தின் அருட்பணியாளர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .