தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் அகில் சிப்ஸ் தயாரிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்து 52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி வழங்கினார்.
தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் அகில் சிப்ஸ் தயாரிக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பார்வையிட்டு 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலான கடனுதவியும், 6 உறுப்பினர்களுக்கு ரூ.4.8 இலட்சம் மதிப்பிலான பயிர்கடன்களும், 7 உறுப்பினர்களுக்கு ரூ 3.88 இலட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்கள் என மொத்தம் 52 உறுப்பினர்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பொது மக்களும் விவசாய பெருமக்களும் கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை முழு அளவில் பெற்று பயனடைய வேண்டுமென பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி மண்டல கூட் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பூர்விசா, துணைப் பதிவாளர் (பொ.வி.நி) திவ்யா, தென்காசி வட்டார கள அலுவலர் ஸ்ரீவித்யா, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்,மேலகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் வேணி, துணைத்தலைவர் ஜீவானந்தம், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி ,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.