திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை வன பாதுகாப்பு படை பணியாளர்கள் மற்றும் கன்னிவாடி வனச்சரக பணியாளர்கள் இணைந்து குற்றவாளிகள் 4-பேரை பிடித்
து கன்னிவாடி வனச்சரகதத்தில் வன உயிரின குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டு குற்றத்தில் தொடர்புடைய
உமா சங்கர்
சுதன்குமார்,
ராமக்கண்ணன்,
தண்டபாணி,
ஆகியோர்களை
கைது செய்து
பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதித்துறை நடுவர் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர்.