நவ. 14
உடுமலையில் ஓட்டல் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
இதில் கெட்டுப்போன 36 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதா ம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் பாலமுருகன் மோகனரங்கம் அடங்கிய குழுவினர் நேற்று உடுமலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடுமலை நகரில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள் கடைகளில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில் கெட்டுப்போன சுமார் 36 கிலோ அளவிலான இறைச்சி 11 கிலோ சமோசா, பப்ஸ் மசால், பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. மேலும் சுகாதார குறைபாடுகள் உள்ள நாலு கடைகளுக்கு தலா ரூபாய் 1000 அபதாரம் விதிக்கப்பட்டது. இதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு தலா ரூபாய் 2000 அபதாரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் தரமானதாக வாங்கி முறையாக சேகரிக்க செய்யவும் அசைவ மூலப் பொருட்களை அன்றாட தேவைக்கு தகுந்தார் போல் வாங்கி பயன்படுத்த வேண்டும். இறைச்சி உள்ளிட்ட உணவு தயாரிக்க பயன்படும் அனைத்து மூலப்பொருட்கள் வாங்கி ரசீது கடைகளில் வைத்திருக்க வேண்டும் உணவு வணிகர்களுக்கு மறுச்சுழற்சி உணவு தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஹோட்டல் மற்றும் கடைகளில் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை வழங்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.