கன்னியாகுமரி மே 22
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பீச் ஜங்சனில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருஉருவப்படத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட மீனவ காங்கிரஸ் செயல்தலைவர் லாலின் தலைமை வகித்தார், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், பிரான்சிஸ், சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் யூசுப்கான், குருத்தங்கோடு ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மற்றும் இந்நிகழ்வில் தர்மராஜ்,அந்திரியால், அந்தோணி தாசன், ஆரோக்கிய ராஜ், ரிக்சன், காபிரின், பென்சிகர், சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.