நாகர்கோவில் – செப் – 02,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 33% மகளிருக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை வரை மத நல்லிணக்க பேரணி நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர தலைவி சோனி விதுலா மகேர் தலைமையில் நடை பெற்றது . இதில் தமிழ் நாடு மாநில மகளிர் காங்கிரஸ் சைய்யத் அசீனா, முன்னிலை வகித்தார் சிறப்பு விருத்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர். விஜய் வசந்த் கலந்து கொண்டு பேரணியை துவங்கி வைத்தார்.
33% மகளிருக்கான இடஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை வரை மதநல்லிணக்க பேரணி நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பெற்றது, இந்த பேரணியானது டெரிக் சந்திப்பில் இருந்து பால்பண்ணை வழியாக பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழே உள்ள ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு சென்று மாலை அணிவித்து பேரணி முடிவுற்றது, இதில்
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் , கிழக்குமாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வதன நிஷா , மேற்கு மாவட்ட தலைவி சர்மிளா ஏஞ்சல் நாகர்கோயில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், ஒபிசி அணி துணைத்தலைவர் டாக்டர் அனிதா, அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டி ரமணி, மாவட்ட துணை தலைவர் ஜான்சி ஆல்பர்ட், கன்னியாகுமரி மகளிர் காங் தலைவர் விஜயா , சாந்தா மற்றும் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.