தருமபுரி மாவட்டம் ,நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் மாநில அளவில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் 11ம் வகுப்பிற்கு 11 மாதங்களுக்கு மாதம் ரூ. 1,500 வீதம் ரூ.16,500ம், இதேபோல் 12ம் வகுப்பிற்கு ரூ. 16,500ம் ஆக மொத்தம் மேல்நிலை கல்விக்காக ரூ. 33,000 கல்வி உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சி.கோவிந்தராசு, பொறுப்பாசிரியர் ப.செந்தில் , தமிழ் ஆசிரியர்கள் நா.துரை, இரா.சம்பத் , நா.மோகன்குமார், அனைத்து ஆசிரியர்கள் , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளியின் மேலாண்மை குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.



