ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோவிலில் 2 ம் பிரதிஷ்டை விழா
சரண கோஷத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை
ராமநாதபுரம், செப்.15-
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம்
ஶ்ரீ வல்லபை அய்யப்பன் கோயிலில் 2-ஆம் பிரதிஷ்டை விழா சரண கோஷத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் நடைபெற்றது.
ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோயிலில் நடைபெற்ற
பிரதிஷ்டை விழாவில் அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு அய்யப்பனுக்கு
பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், விபூதி, தேன், பால், இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் உள்பட 19 வகை திரவியங்களால் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ராமநாதபுரம், ரெகுநாதபுரம், வாலாந்தரவை, வழுதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசித்து அருள் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சாமி தலைமையில் ஸ்ரீ வல்லபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ வல்லபை அய்யப்பன் கோயில் பக்தர்களின் பக்தி கச்சேரி நடைபெற்றது.