மதுரை மார்ச் 4,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறை கீழ்உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை கல்வி பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் 68 வது (எஸ்.ஜி.எப்.ஐ) தேசியப் போட்டிகளில் 76 பேர் பங்கேற்று, முறையே 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பேர் தேசிய அளவிலான பதக்கங்களையும், மாநில அளவிலான போட்டிகளில் சுமார் 1450 பேர் கலந்து கொண்டதில் 99 தங்கம், 71 வெள்ளி, 98 வெண்கலம் என மொத்தமாக 268 பேர் பதங்கங்களை பெற்ற மாணவ, மாணவிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.