தாய் மண்னை அடிமைப்படுத்த நினைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பீரங்கி முனையிலும் மன்னிப்பு கேட்காமல் உயிர் நீத்த மாவீரன் அழகுமுத்து கோனின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் கூளக்கடை பஜார், வாய்க்கால் பாலம் போன்ற பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர் லட்சுமண பெருமாள், நகர துணைத் தலைவர் நாராயணன், நகரச் செயலாளர் விஸ்வநாதன், தூய்மை பாரத மாவட்ட பிரிவு தலைவர்
ராஜ குலசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியல்
நகர பார்வையாளர் முருகன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர்
ராஜ்குமார், நகர கூட்டுறவு பிரிவு தலைவர் வெங்கடேஷ் எல் ஆர் எஸ் பாளையம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி சார்பாக மாவட்ட துணை தலைவர் இசக்கி முத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன்,
இந்து முன்னணி உதயா என்ற உச்சி தென்காசி சுனிதா முத்து கோபாலகிருஷ்ணன் 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.