திருப்பத்தூர்
அக்டோபர் 25
சிவகங்கை மாவட்டத்தை மருது சகோதரர்கள் 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கி ஆங்கிலேயரை தமிழ் மண்ணை விட்டு விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி போராடினர். பின்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டு 223 ஆண்டுகள் ஆகிறது. வருட வருடம் அக்டோபர் 24 ஆம் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை அரசு விழாவாக அனுசரித்து வருகின்றனர்.
அந்த வகையில்
தமிழக அரசு சார்பில் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா, ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மானாமதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தேவகோட்டை துணை ஆட்சியர் ஆயுஸ் வெங்கட்வட்ஸ் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரப்பி உட்பட பொதுமக்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.