சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விருதாளர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு விருதுகளை வழங்கினார் அவ்வகையில்
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, சங்கரன்கோவில் அருகே உள்ள வாழவந்தாள்புரத்தை சேர்ந்த செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு வழங்கப்பட்டது. முதலமைச்சரால் திருவள்ளுவர் விருது பெற்ற புலவரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். புலவர் படிக்கராமுவின் மகன் திருமாவேலன் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராக உள்ளார்.
இந்த சந்திப்பின்போது மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.