நாகர்கோவில் – அக் – 21,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று ” யாஸ் ” நிகழ்வு மற்றும் பொழுது போக்கு மையம் சார்பில் நடைபெற்ற களம் – 2024 மாவட்ட அளவிலான தமிழர்களின் வீர விளையாட்டு மற்றும் தற்காப்பு கலையான சிலம்பாட்டப் போட்டிகளை ” யாஸ்” நிகழ்வு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் நிர்வாக இயக்குனர்கள் டேவிட் ரீகன் , ஷாம் வின்ஸ் மற்றும் ஐசக் ஜெபராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர். இப் போட்டியில் தொடுகம்பு ஒற்றைக்கம்பு , இரட்டைக் கம்பு, சுவடுகள், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இளைஞர்கள், மற்றும் 35 வயது வரையிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுடனர்.
இந்த இந்த மாபெரும் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 15,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 10,000 மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 , மற்றும் பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்களை குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி உதயம் வழங்கி வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.