பூதப்பாண்டி, ஜுலை 29 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள கேசவன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் மணிக்குமார் (43). இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி டெய்லராக வேலை பார்த்து வருகிறார். தற்போது எட்டாமடையில் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் இன்று காலை எட்டாமடை பகுதியிலுள்ள சுமார் 200 அடி உயரமுள்ள ஒரு மலை மீது ஏறி தான் தற்கொலை செய்வதாக கூறியுள்ளார்.
அருகில் அதை பார்த்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் சம்பவ இடம் வந்து அவரிடம் பேசி வந்து மாற்று வழியாக வந்து சுமார் 12.45 மணியளவில் அவரை பிடித்து பத்திரமாக மீட்டு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மலை மீது நின்று ஒருவர் தற்கொலை மிரட்டல் விட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி அந்த இடமே பரபரப்பானது.