திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராதா தலைமை காவலர் கணேசன், போலீசார் காளிமுத்து, தினேஷ், ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் பழனி சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி&பருப்பு கடத்தியது தெரியவந்தது இதை யடுத்து போலீசார் ரேஷன் அரிசி1500 கிலோ, மற்றும் 800 கிலோ துவரம் பருப்பு லாரியில் கடத்தியது தெரிய வந்தது கடத்தலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த தினேஷ், ராதாகிருஷ்ணன் ஆகிய 2-பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் வழக்குப்பதிந்து கடத்தலில் தொடர்புடைய மேலும் 2-பேரை தேடி வருகின்றனர்.



