குளச்சல், மார்- 23
குளச்சல் அருகே மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பெரியவிளை பகுதியில் ரோந்து பணியில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடற்கரையில் சிலர் ஜேசிபி இயந்திரம் வைத்து கடல் மணலை அள்ளி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஜேசிபி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து போலீசார் கடற்கரையில் வாகனங்களுடன் நின்ற இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த வைகுண்டராஜன் (29) பருத்திவிளையை சேர்ந்த முருகன் (58) என்பதும், அவர்கள் கடல் மண்ணை கடத்தியதும் தெரிய வந்தது. பின்ன 2 பேரையும் கைது செய்த போலீசார் ஜேசிபி மற்றும் டெம்போவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.