தஞ்சாவூர் ஜன 28.
தஞ்சாவூரில் நடந்த குடியரசு தின விழாவில் 63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது .விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பின்னர் மூவர்ண நிறத்தில் பலூன்களை பறக்க விட்டார்
தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உடன் சென்றார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடைகளை மாவட்ட ஆட்சியர் அணிவித்து கௌரவித்தார். பின்னர் காவல் துறையை சேர்ந்த 57 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்டத்தில்
சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர் 200 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
முன்னாள் படை வீர நலத்துறையை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தாட்கோ , பல்வேறு தொழில்களுக்கு நிதி உதவி பெறும் பயனாளிகள் 36 பேர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை 10 பயனாளிகள் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 945 மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் டி கே ஜி நீலமேகம் எம்எல்ஏ, மேயர் சண். ராமநாதன், தஞ்சாவூர் .டிஐஜி ஜியாவுல்ஹக் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயசங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.