தமிழச்சி தங்கபாண்டியனுக்கு 186 வது மாமன்ற உறுப்பினர் ஜே.கே.மணிகண்டன் சிறப்பான வரவேற்பு அளித்தார்.சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி 186 வது வட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை புரிந்த போது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40/40 அபார வெற்றி பெற்றது. அந்த வகையில்
தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் 516,628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனையடுத்து தமிழச்சி தங்கபாண்டியன். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடையே நன்றி தெரிவித்தார். அப்போது அவருக்கு சென்னை மாநகராட்சி 14 வது மண்டலம் 186 வது மாமன்ற உறுப்பினரும் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினருமான, ஜே.கே.மணிகண்டன், சிறப்பான வரவேற்பு அளித்தார், உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் மற்றும் 14 வது மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் மற்றும் கட்சியினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,