திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கான 36-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 160 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் மற்றும்
முதுகலை வணிக மேலாண்மை துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர். இவ்விழாவில் அண்ணாப் பல்கலைகழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இபங்களைப் பெற்ற முதுகலை கணினி பயன்பாட்டியல் துறையில் நால்வரும் , முதுகலை வணிக மேலாண்மைத் துறையில் நால்வரும் மொத்தம்
எட்டு மாணவர்கள் இடம் பெற்றனர். அவர்களுக்கு P.S.N.A கல்லூரியின் சார்பாக தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பித்தனர்.இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஹைதராபாத் டி-ஹப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ராய்பூர் IIM துணை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் ராவ் மகான்காளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் அளித்தார்.இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் கோ.தனலெட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் R.S.K ரகுராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் பட்டங்களை பெற்ற அனைத்து மாணவ, மாணவியற்கும் PSNA கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.