கோவை ஜன:07
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைகட்டி அடுத்துள்ள கோபனாரி கிராமத்தில்
நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை கடந்த 35 ஆண்டுகளாக ஆனைகட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மலைவாழ் கிராமத்தில் 15-வது ஆண்டு பொங்கல் விழாவில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு இருளர் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களை வாழ்த்திப் பேசினார்.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி துவக்கவுரையாற்றினார்
இந்நிகழ்வில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டது.
குறிப்பாக பாஷ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் புணரமைக்கும் திட்டம் துவங்கப் பட்டது.
மேலும் சர்கார் நிறுவனத்தின் சிஎஸ்கே திட்டத்தின் மூலமாக புனரமைக்கப்பட்ட அரசுப்பள்ளி பயன்பாட்டுக்கு கொடுக்கப் பட்டது.
விசிட்டோன் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிக்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
10-க்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை இவ்விழாவில் வழங்கப்பட்டது.
இதில் முக்கிய நிகழ்வாக 1000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகள் வழங்கப்பட்டது.
விழாவில் ஆதி கூட்டமைப்பின் சார்பாக பார்வதி அம்மாள் வரவேற்புரையும்,
கோவை மாவட்ட சுகாதார அலுவலர் பாலுச்சாமி வாழ்த்துரையும்,
நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை நிறுவனர் சங்கரநாராயணன் தலைமையுரையாற்றினார்.
மலைவாழ் மக்களுக்காக கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த குக்கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.