கன்னியாகுமரி டிச 9
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால்கனி, ஐயப்பன்
ஆகியோர்
கன்னியாகுமரி ஜீரோ பாய்ண்ட் மற்றும் ரவுண்டாணா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களைை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோக்களில் நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதிக பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றியும்,போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தவறிய 15 ஆட்டோகளை பறிமுதல் செய்து ரூ.42000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் பிரபு
சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நல்ல அறிவுரையும் வழங்கினார்.