திண்டுக்கல் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 146 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான பி.எம்.எஸ்.கே. அபுதாஹிர் தலைமை தாங்கி பேசியதாவது , பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமாக படித்தால் பல்வேறு சிறப்பான பணிகளில் சேர்ந்து நாட்டுக்கும், வீட்டுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும். மேலும் பள்ளியில் படிக்கும் பொழுது ஒழுங்காக படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். படிப்பு ஒன்று தான் நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. இதற்கு தமிழக அரசு படிப்பிற்கேன பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என
சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிகரன், ரமேஷ்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் தன்ராஜ் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.