தென் தாமரைக் குளம் மார்ச் 3
இன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் வாழ்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :- பள்ளிப்பருவம் எனும் பயணத்தின் இறுதி அடியை எடுத்து வைக்கும் நீங்கள் இந்த தேர்வு கால கட்டத்தை மிகுந்த மன உறுதியுடனும் , கவனச்சிதறல்கள் இன்றி கூர்நோக்குடனும் கடந்திட வாழ்த்துகிறேன்.
தேர்வை சந்திக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை என்ற பெயரில் அழுத்தத்தை செலுத்தாமல் அவர்கள் இலகுவான மனநிலையுடன் தேர்வுகளை அணுக உதவி செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இனிய பிள்ளைகளே..
” தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு “என்ற நம் பெரும்பாட்டன் வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவுகளும், படிக்க வேண்டிய பாடங்களும், சந்திக்க வேண்டிய தேர்வுகளும் வாழ்நாள் முழுதும் முடிவில்லாதது என்பதை மனதில் கொண்டு இந்த தேர்வை அணுகுங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



