சென்னை ஜூலை 19
நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் இராமச்சந்திரா பப்ளிக் ஸ்கூல் ஆகிய இரண்டு பள்ளிகளும் இணைந்து பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடத்தின.
இந்த விழாவில் ஜார்க்கண்ட் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னர் சி.பி.இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ – மாணவியருக்கு ரொக்க பரிசும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாப் பேருரை ஆற்றினார்.
இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னதாக நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் ஜெ.எக்ஸ்.ஜூலியஸ் சீசர் வரவேற்புரையாற்றினார்.