சுசீந்திரம் .பிப்.21
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 12 உண்டியல் வைக்கப்பட்டு உள்ளன அந்த உண்டியல்களை எண்ணும் பணியினை கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார் இந்து அறநிலை துறை அரங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துணை ஆணையர் தங்கம் ஆய்வாளர் பொன்னி கோவில் மேலாளர் ஆறுமுகதரன் கணக்கர் கண்ணன் முன்னிலையில் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது உண்டியல் வருவாயாக 28 லட்சத்தி 20 ஆயிரத்தி 204 ரூபாயும் 11 கிராம் தங்கமும் 146 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றது