கோவை, ஜூன் 26 –
ஜே.டி. எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் டிப்ளமோ இன் டிஜிட்டல் பிலிம்மேக்கிங் அண்ட் வி.எஃப்.எக்ஸ் டிப்ளமோ பயிற்சிக்கான துவக்க விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். போன்ற திரைப்படங்களின் மூத்த வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் பீட் டிராப்பர் பேசுகையில், நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால் அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செயின்ட். ஜூட்ஸ் பப்ளிக் ஸ்கூலின் இயக்குநரான டாக்டர் சாம்ஜித் தனராஜனால் துவங்கப்பட்ட ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனம், அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவனமாகும். இதுவரை கோவை நகரில் உள்ள ஜே.டி எஜுகேஷன் & ட்ரைனிங் நிறுவனத்தின் 3 மையங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் டிஎன்இஜி நிறுவனத்தின் வி.எஃப்.எக்ஸ் துறைத் தலைவர் கார்த்திகேயன், உலக வடிவமைப்பு கவுன்சிலின் இந்தியத் தலைவர் மற்றும் அகாடமி ஆஃப் மீடியா அண்ட் டிசைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பிலிப் தாமஸ், டிபிஐம்ஏ இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) பேராசிரியர் ஜேசுராஜா,
ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகி மற்றும் செயலாளர் டாக்டர் பிரியா, ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கௌரவ அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
டிபிஐம்ஏ இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜான் பால் சுவாமிநாதன் மற்றும் அவரது குழுவினர் பாரிஸ் நகரத்திலிருந்து நேரலையில் மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த பயிற்சிக்கான பாடத்திட்டத்தில், மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என அனைத்தும் அடோப் பிரீமியர் ப்ரோ, ஆஃப்டர் எஃபெக்ட்ஸ், போட்டோஷாப், ஆடிஷன், டாவின்சி ரிசால்வ் போன்ற தொழில்துறை கருவிகளுடன் கற்பிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் இணைய குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.