சென்னை, ஜூலை 23 –
இதயத்தைத் தொடும் ஒரு கதையில், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்த நோயிலிருந்து அவரை காப்பாற்றிய அவரது ஸ்டெம் செல் நன்கொடையாளரைச் சந்தித்தார். இரத்த புற்றுநோய் மற்றும் தலசீமியா மற்றும் அப்ளாஸ்டிக் அனீமியா போன்ற பிற இரத்தக் கோளாறுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பான டிகேஎம்எஸ் ஃபவுண்டேஷன் இண்டியா, நன்கொடையாளரை கண்டுபிடிப்பதில் உதவியது.
உயிர் பிழைத்தவரான, சாமனு ஜான், ஒரு மார்கெட்டிங் மேனேஜராக பணி செய்து வருகிறார், 2017 முதல் விவரிக்கப்படாத உயர் காய்ச்சல், வீக்கம், தடிப்புகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். பல முறை மருத்துவமனைக்குச் சென்ற போதிலும், பல ஆண்டுகளாக அவதிப்படுவதற்கான சரியான காரணம் தீர்மானிக்கப்படவில்லை. ஜனவரி 2022 -ல் அவரது இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை ஆபத்தான அளவில் குறைந்தபோது, அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு (ஆர்ஜிஜிஜிஎச்) கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு கடுமையான அப்ளாஸ்டிக் அனீமியா கண்டறியப்பட்டது, இது எலும்பு மஜ்ஜை போதுமான பிளேட்லெட்டுகள், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்தும் ஒரு நிலை ஆகும்.
நோயாளியைக் காப்பாற்ற ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக இருப்பதால், அது இல்லாமல் நோயாளி இறக்கக்கூடும், மருத்துவ குழு பொருத்தமான நன்கொடையாளரைத் தேடத் தொடங்கியது. அவரது குடும்பத்திலும் நண்பர்கள் வட்டத்திலும் யாரும் சரியாக பொருந்தவில்லை. 18 நீண்ட மாதங்களுக்குப் பிறகு, புதுதில்லியில் வசிக்கும் 25 வயதான பரிதோஷ் மிச் சரியாக பொருந்துகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரி/ஆர்ஜிஜிஜிஎச் -யில் இரத்த புற்றுநோய் -நிபுணரும் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று மருத்துவருமான டாக்டர் அருணா ராஜேந்திரன் தலைமையிலான குழு, இயல்பான இரத்த அணுக்களின் உற்பத்தியை மீட்டெடுக்க மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது.
சாம்னு பின்னர் முழுமையாக குணமடைந்து, ஒரு மார்கெட்டிங் மேனேஜராக அவரது பணியை மீண்டும் தொடங்கினார். 18 முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்படாதவர்கள் இரத்த ஸ்டெம் செல் நன்கொடையாளர்களாக பதிவு செய்ய தகுதியுடையவர்கள். https://www.dkms-india.org/register-now -ல் பதிவு செய்யுங்கள்.



