கன்னியாகுமரி, ஜூன் 30 –
கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பகவான் ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.
வைகுண்டபுரம் அருள்மிகு ஸ்ரீ ராமர் திருக்கோயிலில் பகவான் ஸ்ரீ ராமருக்காக பாடல் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். பின்னர் இருவரும் பகவான் ஸ்ரீ ராமனை தரிசித்து, கோயில் கும்பாபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜைகளில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பா.ஜ. தலைவர்கள் ரமேஷ், கோபகுமார், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஜவான் அய்யப்பன், கன்னியாகுமரி நகராட்சி கவுன்சிலர் சி.எஸ். சுபாஷ், தென்தாமாரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் உட்பட பா.ஜ. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.