வேலூர், செப். 19 –
வேலூர் அண்ணா சாலை, ஆபிஸர்ஸ் லைனில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் ஜேகே ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் வேலூர் பில்டர்ஸ் & பில்டிங் மெட்டீரியல்ஸ் எக்ஸ்போ 2025 கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
ஸ்ரீ நாராயணி குழும மருத்துவனையின் இயக்குநரும், ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தின் இயக்குநரும், அறங்காவலருமான டாக்டர் என். பாலாஜி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, SBI வங்கி கிளையின் வேலூர் மண்டல மேலாளர் பி. பல்ராம் தாஸ், வெல் & வால் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுரேஷ் குமார் ரவி, ஸ்ரீ பத்ரா அசோசியேட்ஸ் மேலாண்மை இயக்குநர் எம். சதீஷ் குமார், காவேரி ஸ்டீல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் முதன்மை பொது மேலாளர் எம். கவாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கண்காட்சி செப்டம்பர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் 50 முன்னணி நிறுவனங்களின் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த கண்காட்சி வீடு கட்டுபவர்கள், பில்டர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு தங்கள் பொருட்களை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.



