வேலூர், ஜூலை 16 –
வேலூர் அடுத்த ஊசூர் சேக்கனுர் பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சு போட்டி தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை சிறப்பு விருந்தினர் மலர்க்கொடி வழங்கினார்.
மேலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு எழுது பலகை, நோட்டுபுத்தகம், எழுதுகோல், மற்றும் இனிப்புகளை சுப. சிவக்குமார் வழங்கினார். முடிவில் உதவி ஆசிரியர் நன்றி கூறினார். இதில் மாணவ- மாணவியர்களின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.