வேலூர், ஆகஸ்ட் 08 –
வேலூர் மாவட்டம், வேலூர் அரசமரபேட்டை கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் கோயிலில் நடைபெற்ற இரத உற்சவ திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 2-வது மண்டல குழு தலைவர் கவுன்சிலர் வீனஸ் ஆர். நரேந்திரன், விழா அமைப்பாளர் பொருளாளர் கே. ராமன், தலைவர் ஆர். பார்த்திபன் மற்றும் ஆர். செந்தில், டி.எம். சரவணன், ஆர்.எம். சுப்பிரமணி, கே. ராமூர்த்தி, ஏ.டி.என். ஆனந்தன் மற்றும் அரசமரப்பேட்டை வாசிகள், விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.