வேலூர், செப். 25 –
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக பராமரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணிகளை வேலூர் கோட்டை மைதானத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், தொல்லியல் கண்காணிப்பாளர் டாக்டர் சுஷாந்த் குமார், தொல்லியல் தோட்டக்கலை உதவியாளர் . பிரசாத், வேலூர் வட்டாட்சியர் .வடிவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



