வேலூர், செப். 22 –
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள தெற்கு காவல் நிலையம் அருகே ஃபரீக்ஸ் தனியார் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது அந்தக் கடையில் இன்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 நபர்களுக்கு 1,ரூ. டீ சர்ட் விற்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பு தீ யாக பரவியதால் அதிகாலை முதலே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி கடையின் முன்பு ஒரு ரூபாய் டி சர்ட் வாங்க ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் அங்கு ஒருவரை ஒருவர் முண்டியடிக்க முயன்றதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது
இதை அறிந்து அங்கு வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் அங்க கூடியிருந்த இளைஞர்களை கையால் அடித்து இளைஞர்களை கட்டுபடுத்த முயன்றனர். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் கடையை திறக்கக் கூடாது என உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரூ. 1 டி சர்ட் விற்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பின்பு கடையின் முன்பாக 1 டி சர்ட் வாங்க அதிக கூட்டம் இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டது இதனால் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டது என கடை முன்பு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. இதனால் ஒரு ரூபாய் டீ சர்ட் வாங்க அதிகாலை முதலே காத்திருந்த இளைஞர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது



