குளச்சல், ஜூலை 1 –
ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் பிரபின் (20). நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவின் பைக்கில் பேயோடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரி (37) என்பவரின் பைக் பிரபின் ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளது. இதில் பிரபின் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் லிங்கேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.