தஞ்சாவூர் மே.3
வெப்ப அலையில் இருந்து பொது மக்கள் தற்காத்துக் கொள்வதற் கான வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:
வருகின்ற 3ம் தேதிவரை இயல் பான வெப்ப அளவை காட்டிலும் கூடுதலாக ” தாக்கம் இருக்கக்கூடும் என இந்திய வானியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தின் பாதிப்பு களை குறைக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போது மான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் .தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது மெல்லிய வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்ணிய பருத்தி ஆடை களை அணிந்து செல்ல வேண்டும் கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும். பயணத்தின் போது தேவையான அளவு குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங் களில் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளை உள்ளே இருக்க வைத்துவிட்டு செல்லக்கூடாது. உப்பு சக்கரை கரைசல், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்சி, சாதநீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை பருகலாம்
வீட்டைகுழுமையாக வைத்திரு க்க வேண்டும் .மின்விசிறி பயன் படுத்தியும், ஈரமான ஆடைகள் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைக்க வேண்டும். வெப்ப அலையால் பாதிக்கப்பட்டால் அவரை நிழலின் கீழ் குளிர்ந்த இடத்தில் அமர வைத்து ஈரமான துணியால் துடைக்கவோ அல்லது உடலை அடிக்கடி கழுவி விட வேண்டும். சாதாரண வெப்பநிலை தண்ணீரை தலையில் ஊற்றி உடல் வெப்பநிலையை குறைத்திட வேண்டும் .வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நபர் உப்பு சக்கரை கரைசல், எலுமிச்சை சர்பத், சாதநீர் பருகலாம் , .மேலும் அவரை அருகி ல் உள்ள சுகாதார மையத்திற்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டு ம் .ஏனெனில் வெப்பம் தாக்கப்பட்ட தால் ஏற்படும் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளும் பணியா ளர்களுக்கு உப்பு கரைசல் பவுடர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.